For the best experience use our app on your smartphone
பான் எண்ணை (நிரந்தர கணக்கு எண்) ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வரும் 30-ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலும் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்தித
10:34 pm on 19 Jul
மோடி பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் நிருபர்களிடம் கூறியதாவது,முன்னாள் பிரதமர்களின் பிறந்தநாட்கள், ஏதேனும் ஒரு தினமாக கொண்டாடப்படுகிறது. நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினமாகவும், இந்திரா காந்தி பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. மோடி பிறந்தநாள், வேலையில்லா திண்டாட்ட
10:34 pm on 19 Jul
பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று 2 கோடி தடுப்பூசி செலுத்துவதை இலக்காகக் கொண்டு சுகாதாரத்துறை தீவிரமாக செயல்பட்டுவருகிறது.அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி இன்று தீவிரமாக நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி இன்று ஒரே நாளில் 1.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு ஒரே
10:34 pm on 19 Jul
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா,அவரது நண்பரான ரியான் தோர்பே ஆகியோர் ஆபாச படங்கள் தயாரித்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இவ்வழக்கு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா மற்றும் அவரது கூட்டாளியான ரி
10:34 pm on 19 Jul
குஜராத் மாநிலத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர பட்டேல் கடந்த திங்கட்கிழமை பதவி ஏற்றார். அவருடன் வேறு யாரும் மந்திரியாக பதவி ஏற்கவில்லை. இந்த நிலையில் இன்று அமைச்சர்கள் பதவி ஏற்றனர். 24 பேர் பூபேந்திர பட்டேல் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.அமைச
10:34 pm on 19 Jul
விவசாய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வருடம் ஆனதை குறிக்கும் வகையில், இன்றைய தினத்தைக் கருப்பு தினமாக அனுசரித்து சிரோமணி அகாலிதள கட்சி சார்பில் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் உள்ள ஸ்ரீ ராகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் இருந்து பாராளுமன்றம் வரை கட்சியின் மூத்த தலைவர்கள் சுக்பீர் சிங் பாத
10:34 pm on 19 Jul
இமாசல பிரதேச மாநிலத்தில் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரில் பேசுகிறார். இமாசல பிரதேசம் மாநிலமாக உதயமாகி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி பொன்விழா ஆண்டு சிறப்பு சட்டசபை கூட்டத் தொடராக இது நடைபெறுகிறது.இந்த மாநில சட்டசபையில் பேசும் 3-வது ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல்கலாம் 2003-ம் ஆண
10:34 pm on 19 Jul
அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் பண்டிகை காலங்கள் என்பதால், கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். காய்ச்சல் பாதிப்பு அதிகமாகும்போது உஷாராக இருக்க வேண்ட
10:34 pm on 19 Jul
பீகாரின் ககாரியா மாவட்டத்துக்கு உட்பட்ட பக்தியார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். அங்குள்ள கிராம வங்கியில் இவர் கணக்கு வைத்துள்ளார். இந்த கணக்குக்கு சமீபத்தில் திடீரென ரூ.5½ லட்சம் அனுப்பப்பட்டிருந்தது. வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் நடந்த இந்த தவறை அதிகாரிகள் கண்டறிந்தனர். எனவே அந்த பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு ரஞ்ச
10:34 pm on 19 Jul
கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3,71,503 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது முந்தைய ஆண்டை (4,05,236) விட குறைவு ஆகும். கடந்த ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் கற்பழிப்பு சம்பவங்கள் மட்டுமே 27,046 ஆகும். இதில் பாதிக்கப்பட்ட 25,498 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும், 2,655 பேர் சிறுமிகள் என்பதும் குறிப
10:34 pm on 19 Jul
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வந்த அர்பிதா கோஷ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் அர்பிதா கோஷ். இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமாவை மாநிலங்களவை தலைவர் ஏற்றுக்கொண்டார்.கடந்த மாநிலங்களவை தொடரின்ப
10:34 pm on 19 Jul
தொலைத்தொடர்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அதாவது, தானியங்கி முறையிலான (இத்தகைய முதலீடுகளுக்கு அரசு அனுமதி தேவையில்லை) அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவு
10:34 pm on 19 Jul
சன்சத் தொலைக்காட்சியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.சன்சத் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள்/ கொள்கைகளின் அமலாக்கம், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சம காலத்திற்கு உரிய விஷயங்கள்/ நலன்கள்/ பிரச்சினைக
10:34 pm on 19 Jul
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது உள்ளிட்டவற்றுக்காக வரும் நவம்பர் மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14-ம் தேதிகளிலும், 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் என 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.எனவே இந்த நாட்களில் முகாம்கள் ந
10:34 pm on 19 Jul
தசரா திருவிழா அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. வடமாநிலங்களில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது கூட்டம் அதிக அளவில் கூடுவது வழக்கம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் குண்டுவெடிப்பை அரங்கேற்ற சிலர் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பலைப் பிடிப்பதற்காக தனி
10:34 pm on 19 Jul
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதேபோல், 18 ப
10:34 pm on 19 Jul
பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.வாஷிங்டனில் நடத்தும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார். இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ம் மோரிஸ், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.குவாட் மாநாட்டில் கொரோனா வைரஸ், தடுப்பூசி, பருவநிலை மாற்றம், இந்தோ- பசிபிக் நி
10:34 pm on 19 Jul
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பிரியங்கா களம் இறங்குகிறார். மம்தா பானர்ஜி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.இந்த நிலையில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்த தகவலை வேட்பு மனுவில
10:34 pm on 19 Jul
இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை உருவாகி விடக்கூடாது என்பதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டு வருகின்றன.இந்நிலையில் குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை தடுக்க வதோதரா, காந்திநகர், சூரத், ராஜ்கோட் போன்ற முக்கிய நகரங்களில் நாளை முதல் செப்டம்பர் 25-ந்தேத
10:34 pm on 19 Jul
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் நீட் தேர்வு மைய கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து அதனை வாட்ஸ்-அப் மூலம் பெற்ற ராம் சிங், தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளைத் தெரிவித்துள்ளார். இதற்காக ரூ. 35 லட்சம் பேரம் ப
10:34 pm on 19 Jul
For the best experience use inshorts app on your smartphone